Wednesday, 6 July 2011

Lion of desert (பாலைவனச் சிங்கம்) திரை விமர்சனம்



Lion of desert (பாலைவனச் சிங்கம்) இந்த படம்தான் நாம விமர்சனம் பண்ணபோறோம்.1981 இல் வந்த லிபிய வரலாற்றுப்படம் .இதன் இயக்குனர் முஸ்தபா அக்காத்.ஆண்டனி குயன் உமர் முக்தாராக நடித்த அருமையான படம்.

பாலைவன சிங்கம் லிபிய பழங்குடிதலைவர் உமர் முக்தார்,இரண்டாம் உலக போரின்போது இத்தாலிய ராணுவம் இருபது ஆண்டுகளாக பிடிக்க நினைத்த லிபிய பழங்குடியினருக்கும் நாடாகும் போராட்டமே கதை.இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இத்தாலிய காலனி ஆதிக்கத்தை லிபியாவிலும் நிறுவ முயல்கிறான்.ஆனால் உமர் முக்தாரின் தலைமையில் உள்ள பழங்குடியின மக்கள் அதை தடுக்க முயல்கின்றனர்.

பல ஜெனரல்களின் தலைமையில் தோல்வி அடையும் முசோலினி இறுதியில் ரோடோல்போ க்ராடியாணி தலைமையில் ஒரு படையை அனுப்புகிறான்.க்ராடியாணி தோல்வியே காண படைத்தளபதி ஆவார்.அவருக்கும் தக்க பதிலடி தருகிறார் உமர்.


இதனிடையே பேச்சுவார்த்தைக்கு அழைகிறார்கள் இந்த  வேளையில் இத்தாலிய பெரும்படையை அனுப்புகிறான் முசோலினி.இந்த போரில் பாலைவனத்தில் முதல் முறையாக விமான படை பயன்படுத்தப்பட்டது இந்த போரில் ஜெய்க்க போவதில்லை என்று தெரிந்தும் உமர் போரிடுவர் தன படையைக் கொண்டு.இத்தாலியப்படைகள் பண்ணிய கொடுமைகளை தோலுரித்து காடும் படம். இறுதியில் உமர் முக்தாரின் நிலை என்ன என்பதை அருமையாக காட்டி இருப்பர்.உமர் ஒரு சிங்கம் என்று க்ராடியாணியே சொல்லும் காட்சி சூப்பர்.

உமர் ஒரு ஆசிரியர்.ஒரு ஆசிரியர் நினைத்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதை காட்டும் படம்.அனைவரும் பார்க்கவேண்டிய அற்புதமான புரட்சி சித்திரம்.

உமர் முக்தாரின் புகைப்படங்கள்:



படத்தின் முதல் 8 நிமிட காட்சிகள் :



1 comment:

Unknown said...

அருமையான படங்க

Related Posts Plugin for WordPress, Blogger...