Wednesday, 22 June 2011

இன்சப்சன்(Inception)



இந்த நூற்றாண்டின் மிகவும் அருமையான திரைப்படம் இன்சப்சன் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வந்த திரை படங்களில் இது முக்கியமான படம்.இதை தமிழில் கனவு வேட்டை என மொழி மாற்றம் செய்ய பட்டது மனம் எவ்ளோ முக்கியமான ஒன்னு அதுலயும் ஒருவனுடைய உள்மனதில் உள்ள ஒரு ஐடியா வை திருட ஹீரோ காப் மற்றும் அவர் குழுவினர் செய்யும் முயற்சியும் அதன் பின்  ஏற்படும் பிரச்சனைகளும் தான் படம். 

காப் கடல் அலைகளால் அடித்து கரை தள்ளப் படுவது போல் படம் ஆரம்பிக்கிறது.
கதை என்னன்னா காப் கனவை களவாடுவதில் கில்லாடி.இப்படி கனவுலகில் சோதனையின் போது நிஜவுலகம் கனவுலகம் என நினைத்து அவன் மனைவி தற்கொலை செய்து கொள்கிறாள்.அடிகடி தன் கனவில் தானே சென்று தான் மனைவியை காப் பார்த்து வருகிறான் கனவின் இந்த நிலையை லுடோ என்கின்றனர்.
அவனிடம் ஒரு வேலை தரப்படுகிறது சைடோவின் (கேன்வடநபி) கனவின் மூலம் ரகசியத்தை திருட முயன்று அது தோல்வியில் முடிகிறது.அதை சைடோவுக்கும் தெரிந்து விடுகிறது அதற்கு சைடோ தனக்காக தான் எதிரியின் மனதில் உள்ள ஐடியா வை திருட சொல்கிறான் அப்படி செய்தல் காப்பை எல்லா பிரச்சனைகளிளுருந்தும் காப்பாற்றுவதாகவும் அவன் குழந்தைகளிடம் அவனை சேற்பதகவும் கூறுகிறான் சைடோ அதுக்கு ஒரு டீமும் தயார் செயசொல்கிறான்.இதில் காபின் பாட்னர் ஆர்தர்,கனவை வடிவமைக்கும் பெண் அறியட்னி ,மற்றவர்களை எளிதாக உருவத்தை மாற்றி ஏமாற்றும் ஈமேஸ் ,மயக்க மருந்து எக்ஸ்பெர்ட் யூசுப் மற்றும் இவர்களுடன் இணைத்து சைடோவும் அவனின் எதிரி ராபர்ட்பிளாட்சேர் கனவில் சென்று அவன் ஆழ்மனதில் உள்ள ஐடியா வை திருட முயற்சி  செய்கின்றனர்.
இதில் பிளாட்சேர் கனவில் சென்று அவனை காப் நம்பவைத்து அவனிடம்  ஐடியா வை திருட திட்டம் தீட்டுகிறான் காப் அதற்கு அவன் டீம் உதவுகிறது .இதுல மேட்டார் என்னன்னா கனவுக்குள்ள கனவு கனவுக்குள்ள கனவுன்னு தூள் கிளபிருக்காறு நம் டைரக்டர்.பிளாட்சேர் கனவில் சென்றவுடன் பிளாட்சேர் கனவில் தனக்கென ஒரு படையை உருவாக்கி வைத்திருப்பான்.இதை காப் மற்றும் அவன் டீம் சற்றும் எதிர்பாக்கவில்லை இதில் சைடோ காயம் படுகிறான் இதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் மீதி கதை.
ஒரு டைரக்டரால்  இவ்ளோ யோசிக்கமுடியும?அதை அழகான திரைகதை மூலம் படம் முழுக்க அழகாக கொடுத்திருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன்.படம் இரண்டரை மணிநேரம் சலிப்பு தட்டாமல் செல்கிறது.கண்டிப்பா பாக குடும்பத்துடன் பாக்க  வேண்டிய படம்.
இப்படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.


காபாக லியானர்டோ  டேகாபரியோ நடித்திருக்கிறார் .இதன் ட்ரைலர் கீழே 





No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...