Monday, 4 July 2011

ஐ யம் சாம்(i am sam)திரை விமர்சனம்


இதுதான் தெய்வ திருமகன் இங்கிலிஷ்ல ஆனா இந்தப்படம் 2001 ல வந்துருச்சு.இப்போ இதன் தமிழ்ல தெய்வ திருமகன்னு வந்துருக்கு இதன் கதை என்னன்னா.சாம் தாசன் (சீன் பென்) ஒரு மனநிலை குறைந்த மனிதன் மற்றும் அவர் மனைவியால் கைவிடப்பட்ட ஒரு கொழந்தையின் லூசியின் (டகோட்டா பான்னிங்) தந்தை.சாம் எல்லாத்தையும் பொருத்து கொள்வார் அவரது நண்பர்கள் மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள்.

அவரது பக்கத்துக்கு வீட்டு பெண் மிகவும் நல்லவள் அவள்தான் அவர் குழந்தையை பார்த்துக் கொள்பவள் சாமால் முடியாத போது,சாம் தன மகளை மிகவும் அன்புடனும் அரைவனைபுடனும் பார்த்துக்கொள்கிறான் ஆனாலும் அவளது வகுப்பு மாணவர்கள் அவள் அப்பாவை வைத்து கிண்டலடிக்கின்றனர்.  
இதனால் அவள் மிகவும் வேதனை அடைகிறாள்.அவள் சாமைவிட அறிவில் சிறந்தவள் என்ற எண்ணம் வருகிறது.
ஒரு சமுக சேவகர் அவளை சாமிடமிருந்து பிரித்து செல்கிறார் பாதுகாப்பு என்ற பேரில்.அதுவும் வாரத்தில் மகளை இரண்டு தடவை சாம் பார்க்க அனுமதி உண்டு.  

நண்பர்களின் அறிவுரையின்படி ஒரு ஹை பவர் வக்கீலின்(ரிட்ட ஹரிசன் (Michelle Pfeiffer)) உதவியை நாடுகிறார்.அவளும் வாழ்கையில் பல இன்னல்களை அனுபவித்தவள் சாம் அவளுக்கு உதவுகிறான் அவளின் கொடுமைக்கார கணவனிடம்   இருந்து அவளை காப்பாற்ற அறிவுரை கூறுகிறார்.அவளின் மகனிடமும் அவளை சேர்க்க உதவுகிறார்.


இதனிடையே லூசி ராண்டி என்பவரிடம் வளர்கிறாள்.அவளை தத்து எடுக்க பாஸ்டர் குடும்பம் முயல்கிறது.ஆனால் லூசிக்கு அப்பாவிடம் செல்ல விருப்பம் இதற்காக அவள் சாம் விட்டிற்கு செல்ல முயல்கிறாள். ஆனால் கடைசிவரை சாம் குழந்தை வளர்க முடியாது    என  எதிப்பு கவுன்சில் கூறி சாமை சமாதான படுத்த முயல்கிறது.இறுதியில் சாம் தன குழந்தையுடன் இணைந்தாரா?இல்லையா? இன்பதுதன் மீதி கதை.

அருமையான படம் அப்பா மகள் பாச போராட்ட கதையை அருமையாக தந்திருக்கிறார் டைரக்டர் ஜெஸ்ஸி நீல்சன் எல்லாரோட நடிப்பும் சூப்பர் முக்கியமா சீன் பென் ஆஸ்கார் வின்னிங் நடிப்பு எதை நியூ லைன் சினிமா தயாரித்து வெளியிட்டுள்ளது.கண்டிப்பா பக வேண்டிய படம்.





5 comments:

மாதவன் said...

நல்ல பதிவு

மதுரை சரவணன் said...

super vimarsanam... vaalththukkal

பாகிஸ்தான்காரன் said...

மிக அருமையான படம். முடிவில் அனைவரும் கண்கலங்குவர். ஆனால் விஜய் விக்ரம் கூட்டணி எப்படியும் படத்தை கதையை நாசமாக்கிவிடும். இப்படி காப்பி அடிப்பதை எதிர்த்து வழக்குப்போடமுடியாதா?

வெள்ளித்திரை விமர்சனம் said...

மதுரை சரவணன் said...
super vimarsanam... vaalththukkal

நன்றி நண்பரே.

வெள்ளித்திரை விமர்சனம் said...

Yaani said...
மிக அருமையான படம். முடிவில் அனைவரும் கண்கலங்குவர். ஆனால் விஜய் விக்ரம் கூட்டணி எப்படியும் படத்தை கதையை நாசமாக்கிவிடும். இப்படி காப்பி அடிப்பதை எதிர்த்து வழக்குப்போடமுடியாதா?

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

Related Posts Plugin for WordPress, Blogger...